மாதவன் தான் நடிக்க சொன்னார்! தீபா வீட்டுக்கு வந்த போலி வருமானவரித்துறை அதிகாரி வாக்குமூலம்

கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபாவின் வீட்டிற்கு வருமானவரித்துறை அதிகாரி என்ற பெயரில் ஒருவர் திடீரென நுழைந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

அந்த அதிகாரியிடம் தீபாவின் வழக்கறிஞர் சில விளக்கங்களை கேட்டபோது அவர் மீது சந்தேகம் கொண்டு போலீசுக்கு தகவல் கொடுத்தார். போலீசார் விரைந்து வந்து விசாரணை செய்து கொண்டிருந்தபோது திடீரென அந்த நபர் சுவரேறி குதித்து தப்பிவிட்டார்

இந்த நிலையில் தப்பியோடிய அந்த மர்ம நபர் நேற்றிரவு சென்னை மாம்பலம் காவல்நிலையத்தில் சரண் அடைந்தார். அவரிடம் விசாரித்தபோது அவரது பெயர் பிரபு என்றும், தீபாவின் கணவர் மாதவன் தான் தன்னை இவ்வாறு நடிக்க சொன்னதாகவும், அவர் சொன்னபடி செய்தால் சினிமாவில் நடிக்க வாய்ப்பு தருவதாக கூறியதாகவும் வாக்குமூலம் அளித்துள்ளார். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

வரன் தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!
shadow

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *