தவறு நடந்ததை ஒப்புக்கொள்கிறேன்: ஃபேஸ்புக் நிறுவனர் மார்க்

கேம்பிரிட்ஜ் அனலிடிக்கா முறைகேடு விவகாரம் கடந்த இரண்டு நாட்களா விஸ்வரூபம் எடுத்து வந்த நிலையில் இந்த விஷயத்தில் தவறுகள் நடந்ததை ஒப்புக்கொள்வதாக ஃபேஸ்புக் நிறுவனர் மார்க் ஸக்கர்பெர்க் தெரிவித்துள்ளார்.

இது குறித்து தனது ஃபேஸ்புக் பக்கத்தில் விளக்கமளித்துள்ள மார்க், பயனாளிகளின் தகவல்களை பாதுகாக்கும் கடமை ஃபேஸ்புக் நிறுவனத்திற்கு உண்டு ஆனால் அதை செய்ய முடியாவிட்டால் மக்களுக்கு சேவையாற்றும் தகுதி தங்களுக்கு இல்லை என்றே அர்த்தம். இந்த தவறு நடந்தது எப்படி என்பது தாம் ஆய்வு செய்து வருகிறோம். இதுபோன்ற தவறுகள் எதிர்காலத்தில் நடக்காமல் இருப்பதற்கு தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் பல ஆண்டுகளுக்கு முன்பே எடுக்கப்பட்டு விட்டது.

இருப்பினும் சில தவறுகள் நடந்துள்ளது. இவற்றை தவிர்க்க இன்னும் தீவிர நடவடிக்கை தேவைப்படுகிறது. இவ்வாறு மார்க் தமது பதிவில் தெரிவித்துள்ளார். தவறுக்கு பொறுப்பேற்றுக்கொண்டுள்ள மார்க், ஃபேஸ்புக் தளம் பாதுகாப்பாக இருப்பதை உறுதி செய்யவுள்ளதாகவும் கூறியுள்ளார். இதற்காக தாம் எடுக்கவுள்ள நடவடிக்கைகளையும் அவர் பட்டியலிட்டுள்ளார்.

Facebook owner mark status about the users information leak issue

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *