shadow

1403228516903உலகின் நம்பர் ஒன் சமூக வலைத்தளமாக விளங்கிவருவது ‘பேஸ் புக்’ இணையதளம். ஒருசில நாடுகளில் ஃபேஸ்புக் தடை செய்யப்பட்டிருந்தாலும், இந்த வலைத்தளத்தை இந்தியா உள்பட உலகமெங்கும் உள்ள பல நாடுகளில் சுமார் 120 கோடி பேர் பயன்படுத்தி வருகின்றனர். குறிப்பாக இளைய தலைமுறையினர் மத்தியில் ஃபேஸ்புக் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. பல இளைஞர்கள் இந்த இணையதளத்திற்கு அடிமையாகியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் நேற்று மதியம் சுமார் 1.30 மணியளவில் திடீரென ‘பேஸ்புக்’ 30 நிமிடம் முடங்கியது. இதனால் ஃபேஸ்புக் பயனாளிகள் பெரும் பரபரப்பு அடைந்தனர்.  ‘ஸ்டேட்டஸ்’ போட முடியாமல் கோடிக்கணக்கான பயனாளிகள் தவித்தனர். இந்த தடங்கலுக்கு என்ன காரணம் என்று தெரியாமல் தங்கள் கருத்துக்களை டுவிட்டர் போன்ற இணையதளங்களில் பரிமாறி வந்தனர்.

சிலதொழில்நுட்ப காரணங்களால் ஃபேஸ்புக் சில நிமிடங்கள் தடை பட்டதாகவும், இதற்காக ‘பேஸ் புக்’ ஆர்வலர்களிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்வதாகவும், ஃபேஸ்புக்கின் தலைமை நிர்வாகம் மன்னிப்பு கேட்டுக்கொண்டது. பின்னர் இந்தப் பிரச்சினை சரி செய்யப்பட்டு விட்டது. அதன்பிறகே ‘பேஸ் புக்’ ஆர்வலர்கள் நிம்மதி அடைந்தனர்.

இதனிடையே கலிபோர்னியாவில் உள்ள ஃபேஸ்புக் தலைமை அலுவலகத்தில் ஃபேஸ்புக் ஊழியர்கள் அனைவரும் மொத்தமாக ராஜினாமா செய்ய முன்வந்ததாக வதந்தி கிளம்பியது. இதில் உண்மையில்லை என்றும், வெறும் வதந்திதான் என்றும் ஃபேஸ்புக் அறிவித்தது.

Leave a Reply