shadow

Expendables-3ஹாலிவுட்டின் சூப்பர் ஸ்டார்களான சில்வெஸ்டர் ஸ்டாலோன், அர்னால்டு மற்றும் பலர் நடித்த Expendables 3 என்ற திரைப்படம் உலகம் முழுவதும் இன்று வெளியாகிறது. ஆனால் இந்த படம் நேற்றே சில இணையதளங்களில் வெளியாகி அதை மில்லியன் கணக்கானோர் டவுன்லோடு செய்துள்ளதால் படக்குழுவினர் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

Expendables 3 படநிறுவனம் நேற்று அமெரிக்க நீதிமன்றத்தில் இதுகுறித்து வழக்குப் பதிவு செய்துள்ளது. சம்மந்தப்பட்ட இணையதளங்கள் உடனடியாக படத்தினை நீக்கவேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவுட்டு உள்ளது. ஆனால் அதற்குள் அந்த இணையதளத்தில் இருந்து 24 மணி நேரத்தில் 189,000 பேர் அதற்குள் படத்தை டவுன்லோடு செய்துவிட்டனர்.

இதுகுறித்து சம்மந்தப்பட்ட இணையதளம் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடைபெறுகிறது. படம் வெளியாகும் முன்னரே அதை சுமார் 2லட்சம் பேர் படத்தை பார்த்துவிட்டதால் தங்களுக்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டுள்ளது என்றும் இதற்காக அந்த இணையதளம் தங்களுக்கு $1பில்லியன் நஷ்ட ஈடு தரவேண்டும் என்றும் கோரி Expendables 3 படநிறுவனம் புதிய வழக்கு ஒன்றை இன்று தாக்கல் செய்துள்ளது. இதனால் ஹாலிவுட்டில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Leave a Reply