விஷால் அதிரடியால் விஜய் ஃபர்ஸ்ட்லுக் தேதி திடீர் மாற்றம்

இயக்குனர் அட்லி இயக்கத்தில் விஜய், சமந்தா, ராதிகா உள்பட பலர் நடிப்பில் உருவான திரைப்படம் ‘தெறி’. இப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றதை அடுத்து, அட்லி, விஜய் கூட்டணி மீண்டும் ஒன்று சேர்ந்துள்ள படம் ‘தளபதி 61. இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அதில் சமந்தா, காஜல், நித்யா மேனன் என மூன்று ஹீரோயின்கள் நடிக்கின்றனர். எஸ்.ஜே.சூர்யா, சத்யராஜ், வடிவேலு, சத்யன் உள்ளிட்ட ஏராளமான நட்சத்திரங்கள் நடித்து வருகின்றனர். இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார்.

இந்நிலையில் விஜய் 61 படத்தின் தலைப்பு மற்றும் ஃபஸ்ட் லுக் விஜய்யின் பிறந்த நாளான ஜூன் 22ஆம் தேதி வெளியாகும் என்று படக்குழுவினர் தரப்பில் கூறப்பட்டது. ஆனால் தயாரிப்பாளர் சங்க தலைவர் விஷால் வரும் ஜூன் 1 முதல் திரைத்துறையினர்களின் வேலைநிறுத்தம் குறித்த அறிவிப்பை கடந்த சில நாட்களுக்கு முன்னர் அறிவித்துள்ளதால் ஜூன் 1ஆம் தேதிக்கு முன்பு, விஜய்-அட்லி படத்தின் தலைப்பு மற்றும் ஃபஸ்ட் லுக் வெளியாகும் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது. அனேகமாக மே 28ஆம் தேதி இந்த படத்தின் டைட்டிலுடன் கூடிய ஃபர்ஸ்ட்லுக் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வரன் தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!
shadow

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *