shadow

images

காஞ்சிபுரத்தில் வரும் மே 23-ஆம் தேதி காவல் உதவி ஆய்வாளர் பணியிடத்துக்கான எழுத்து தேர்வு நடைபெற உள்ளது.

இது குறித்து காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விஜயகுமார் கூறியதாவது:

தமிழகத்தில் அனைத்து காவல் நிலையங்களிலும் உள்ள 1,088 காவல் உதவி ஆய்வாளர் காலிப்பணியிடங்களை நிரப்பும் வகையில் அதற்கான தேர்வு அறிவிப்பை தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வுக் குழு வெளியிட்டது. அதன்படி இந்தப் பணியிடத்துக்கான எழுத்துத் தேர்வு பொதுப் பிரிவினருக்கு மே 23-ஆம் தேதியும், காவல் துறைப் பிரிவினருக்கு மே 24-ஆம் தேதியும் நடைபெறவுள்ளன.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் பொதுப் பிரிவினர் பிரிவில் 5 ஆயிரம் பேர் தேர்வு எழுத உள்ளனர். இவர்களுக்கான தேர்வு நுழைவுச்சீட்டுகள் அனுப்பப்பட்டுள்ளன. காஞ்சிபுரம் மாவட்ட தேர்வர்களுக்கு தேர்வு காஞ்சிபுரம் வெள்ளைகேட் பல்லவன் பொறியியல் கல்லூரி மற்றும் அதன் அருகிலேயே உள்ள நரசிம்ம பல்லவன் பாலிடெக்னிக் கல்லூரிகளில் நடைபெறும். இத்தேர்வின் போது மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தலைமையில் 2 ஏடிஎஸ்பிக்கள், 10 டி.எஸ்.பி.க்கள், 25 காவல் ஆய்வாளர்கள், 300 காவலர்கள், 50 அமைச்சுப்பணியாளர்கள் கண்காணிப்பில் ஈடுபட உள்ளனர் என்றார் காவல் கண்காணிப்பாளர் விஜயகுமார்.

Leave a Reply