கொடநாடு கொள்ளை வழக்கில் முன்னாள் அமைச்சர்கள் தொடர்பா?

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான கொடநாடு எஸ்டேட் காவலாளி ஓம்பகதூர் கொலை அதனையடுத்து முக்கிய குற்றவாளி கனகராஜின் விபத்து மரணம் ஆகியவற்றுக்கு முன்னாள் அமைச்சர் ஒருவரே காரணம் என்றும், அவர் விரைவில் கைது செய்யப்படுவார் என்றும் தகவல்கள் வெளிவந்துள்ளது/

இந்த வழக்கில் இதுவரை ஒன்பது பேர் கைது செய்யப்பட்டிருப்பதாகவும், அவர்களிடம் நடத்திய விசாரணையில் முன்னாள் அமைச்சர்கள் மற்றும் சில மாவட்டச் செயலாளர்களுடன் கைது செய்யப்பட்டவர்கள் செல்போனில் பேசியதாகவும் தெரிய வந்துள்ளதாம்.

ஆனால் கொடநாடு பங்களாவில் கட்டில், மெத்தை, ஃபர்னீச்சர் போன்றவைகளை அமைக்கும் பணியில் ஜதீன்ஜாய், ஜம்சீர் அலி ஆகிய இருவரும் ஈடுபட்டார்கள் என்றும் இவர்களை கொடநாடு பங்களாவுக்கு வேலைக்கு அனுப்பிவைத்தது, அந்த முன்னாள் அமைச்சர்கள்தான் என்றும், அதுகுறித்து தான் அவர்கள் செல்போனில் பேசியதாகவும், மற்றபடி இந்த கொள்ளைக்கும் ஓம்பகதூர் கொலைக்கும் தாங்கள் சம்பந்தப்படவில்லை என்றும் கைது செய்யப்பட்டவர்கள் கூறியதாக தெரிகிறது. இருப்பினும் அவர்களிடம் தீவிர விசாரணை செய்யப்பட்டு வருகிறது.

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *