shadow

தமிழக காங்கிரஸ் தலைவர்களும் தகுதி வாய்ந்தவர்களாக இல்லை. ஈ.வி.கே.எஸ் இளங்கோவன்
EVKS(1)
பிரதமர் மோடி மற்றும் முதல்வர் ஜெயலலிதா சந்திப்பு குறித்து சமீபத்தில் சர்ச்சைக்குரிய வகையில் விமர்சனம் செய்து கடும் கண்டனங்களை பெற்ற தமிழக காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனனை டெல்லியில் காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி நேற்று சந்தித்து பேசினார். இளங்கோவனிடம் ராகுல்காந்தி தனது அதிருப்தியை தெரிவித்ததாக கட்சி வட்டாரங்கள் கூறுகின்றனர். இந்நிலையில் இந்த சந்திப்புக்கு பின்னர்
நிருபர்களுக்கு இளங்கோவன் பேட்டி அளித்தார்.

இந்த பேட்டியின் முழுவிபரங்கள் பின்வருமாறு:

கேள்வி:- கூட்டணி பற்றி ஏதாவது முடிவு எடுக்கப்பட்டதா?

பதில்:- அது பற்றியெல்லாம் எதுவும் பேசவில்லை. எங்களை பொறுத்தவரை எங்கள் கட்சி எப்படி தனியாக வரும் தேர்தலை சந்திப்பது என்பது பற்றித்தான் அதிகம் பேசினோம்.

கேள்வி:- அப்படியென்றால் கூட்டணி எதுவும் இன்றி தனியாகத்தான் போட்டியிடப்போகிறீர்களா?

பதில்:- நாங்கள் அப்படித்தான் யோசித்து கொண்டிருக்கிறோம். செயல்படுவோம். தனியாக போட்டியிடுவதற்குத்தான் அனைத்து ஆயத்தங்களையும் செய்து கொண்டிருக்கிறோம். தேர்தல் நேரத்தில் கூட்டணி தேவை என்றால் அந்த நேரத்தில் பார்த்துக்கொள்வோம்.

கேள்வி:- ராகுல் காந்தி எப்போது பிரசாரத்துக்காக தமிழகம் வரப்போகிறார் என்பது பற்றி பேசினீர்களா?

பதில்:- இல்லை. பொதுவாக தேர்தலை எப்படி எதிர்கொள்வது, வேட்பாளர்கள் தேர்வு எப்படி செய்வது என்பது பற்றி பேசினோம். கட்சி அமைப்புகள் எப்படி இருக்க வேண்டும், தமிழகத்தில் 64 ஆயிரம் வாக்குசாவடிகள் உள்ளன. ஒவ்வொரு வாக்கு சாவடிக்கும் 5 பேரை நியமிக்க வேண்டும் என்பது பற்றி பேசினோம்.

கேள்வி:- தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவர்கள் சிலரை பற்றி ராகுல் காந்தியிடம் ஏதாவது முறையிட்டீர்களா?

பதில்:- ராகுல் காந்தியிடம் போய் சொல்லும் அளவுக்கு எந்த தமிழக காங்கிரஸ் தலைவர்களும் தகுதி வாய்ந்தவர்களாக இல்லை.

இவ்வாறு அவர் பதில் அளித்தார்.

Leave a Reply