ஈ.வி.கே.எஸ். இளங்கோவனுக்கு மூச்சு திணறல். மருத்துவமனையில் அனுமதி.

evksதமிழக முதல்வர் ஜெயலலிதா கடந்த இரண்டு மாதங்களாக உடல்நலக்கோளாறு காரணமாக அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அதேபோல் நேற்று மூத்த பத்திரிகையாளரும் அரசியல் விமர்சகருமான சோ ராமசாமி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இந்நிலையில் முன்னாள் தமிழக காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் கோவை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

கோவையில் நடைபெற்ற கொங்கு மண்டல காங்கிரஸ் நிர்வாகிகள் கலந்தாய்வு கூட்டத்தில் நேற்று கலந்து கொண்ட போது இளங்கோவனுக்கு திடீரென மூச்சு திணறல் ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து அவர் உடனடியாக கோவை பீளமேட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் உடல்நலம் குறித்து தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசு நேரில் சந்தித்து உடல் நலம் விசாரித்தார். இளங்கோவன் தற்போது நல்ல நிலையில் உள்ளதாகவும், அவர் இன்னும் ஓரிரு நாட்களில் வீடு திரும்புவார்’ என்றும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *