shadow

நீங்கள் அத்தனை பேரும் உத்தமர் தானா சொல்லுங்கள்! நவாஸ் ஷெரிப்ப் கேள்வி

முன்னாள் பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரிப் ஊழல் வழக்கில் சிக்கி பதவியை இழந்திருக்கும் பாகிஸ்தானில் உள்ளவர்கள் அனைவரும் உத்தமர்கள் தானா? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

பாகிஸ்தானி அடுத்த பிரதமரை தேர்வு செய்ய ஆளும் பாகிஸ்தான் முஸ்லிம் லீக்-நவாஸ் கட்சியின் சார்பில் மேலிட ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பேசிய நவாஸ் ஷெரீப், ‘உங்கள் தலைவர் (நவாஸ் ஷெரிப்) மீது எவ்வித ஊழல் கரையும் இல்லை என்பதை எண்ணி நீங்கள் பெருமைப்பட வேண்டும். நான் யாரிடம் இருந்தும் அன்பளிப்புகளோ, லஞ்சமோ பெற்றதில்லை. என் கொள்கைகளில் என்றுமே சமரசம் செய்து கொண்டதில்லை.

எனது குடும்பம் மட்டும் ஒழுங்காகவும், ஒழுக்கமாகவும் இருக்க வேண்டும் என்றால் எப்படி? இந்த நாட்டில் உள்ள அனைவருமே வாய்மையாளர்களாகவும், நேர்மையாளர்களாகவும், உத்தமர்களாகவும் இருக்கிறார்களா?

நான் தவறு செய்திருந்தாலோ, இந்த நாட்டில் இருந்து எனக்கு சொந்தமில்லாததை எடுத்திருந்தாலோ எனக்கு குற்ற உணர்வு இருக்கும். எனது பணிக்காக நான் சம்பளம்கூட வாங்கியதில்லை. எனது மனசாட்சி தெளிவாக இருக்கிறது என்று நவாஸ் ஷெரிப் கூறினார்

 

Leave a Reply