shadow

up governorஉத்தரபிரதேசத்தில் கடவுளே வந்து ஆட்சி செய்தாலும் கற்பழிப்பு சம்பவங்களை தடுக்க முடியாது என்று அந்த மாநில கவர்னரே கருத்து தெரிவித்து உள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

உ.பியில் பெண்களுக்கு எதிரான பாலியல் பலாத்கார சம்பவங்கள் அதிகரித்துக்கொண்டே இருக்கின்றது. ஒவ்வொரு கற்பழிப்பு சம்பவங்களையும் அரசு தடுக்க முடியாது என்றும், உ.பி ஜனத்தொகையை வைத்து பார்க்கும்போது இங்கு கற்பழிப்பு சம்பவங்கள் நடைபெறுவது குறைவு என்றும் முலாயம்சிங் யாதவ் கூறியுள்ளர்.

இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள உத்தரபிரதேச கவர்னர் அஜீஸ் குரேஷி, “உத்தரபிரதேசத்தில் கடவுளே நேரடியாக வந்து ஆட்சிபுரிந்தாலும், கற்பழிப்பு சம்பவங்களை தடுக்க முடியாது. ராணுவம், போலீஸ் மற்றும் உலக நாட்டு போலீஸை கொண்டுவந்து இறக்கினாலும் இந்த மாநிலத்தில் கற்பழிப்பு சம்பவங்கள் தொடர்ந்துகொண்டேதான் இருக்கும் என்றும் அஜீஸ் குரேஷி கூறியுள்ளார். குரேஷியின் இந்த கருத்துக்கு உ.பி மாநில பாஜக கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. அவருடைய கருத்தை வாபஸ் பெறுவதோடு அவர் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் பாஜக வலியுறுத்தியுள்ளது.

Leave a Reply