ஐரோப்பிய விண்வெளி நிறுவனம் கடந்த 2009 ஆம் ஆண்டு புவி ஈர்ப்பு மற்றும் பெருங்கடல் சுழற்சி பற்றி ஆராய ஜி.ஓ.சி.இ. என்ற ஒரு விண்கலத்தை விண்வெளிக்கு அனுப்பி வைத்தது. இந்த விண்கலம் 4 வருட காலமாக பெருங்கடல், கடல் மட்டம், பனிப்பாலங்களின் செயல்பாடுகள் மற்றும் பூமியின் உட்புறம் குறித்த அரிய தகவல்களை அனுப்பி ஆராய்ச்சியாளர்களுக்கு பெரிதும் உதவியது.

இந்நிலையில், கடந்த 21 ஆம் தேதி அந்த விண்கலத்திலுள்ள எரிபொருள் தீர்ந்துபோனது. இதையடுத்து, அதன் சுற்று வட்டப்பாதையிலிருந்து விலகி பூமியை நோக்கி வந்துகொண்டிருந்தது. இது எங்கு, எப்போது விழும், என்ன பாதிப்பை ஏற்படுத்தும் என்ற பீதி நிலவியது. இந்நிலையில், நேற்று நள்ளிரவு பூமியின் வளிமண்டலத்திற்குள் அந்த காலாவதியான விண்கலம் நுழைந்தது. அது அண்டார்டிகா, இந்தியப் பெருங்கடல், பசிபிக் பெருங்கடல் மேலாக சைபீரியாவின் வளிமண்டலத்தில் பாய்ந்து வந்தபோது உராய்வு காரணமாக அது சுக்கு நூறாக சிதைந்து போனது. இருந்தும், இதனால் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என்று கூறப்படுகிறது.

Leave a Reply