shadow

யூரோ கோப்பை கால்பந்துப் போட்டி: இங்கிலாந்து அதிர்ச்சி தோல்வி

euroயூரோ கோப்பை கால்பந்து போட்டி வரலாற்றில் முதல்முறையாக இங்கிலாந்து அணி காலிறுதி வாய்ப்பை இழக்கும் அளவுக்கு மோசமான தோல்வியை அடைந்துள்ளது. அதேபோல் இங்கிலாந்து அணியை வென்றதன் மூலம் முதன்முதலாக காலிறுதி வாய்ப்பை ஐஸ்லாந்து அணி பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

நேற்று நடைபெற்ற இரு அணிகளுக்கு இடையேயான பரபரப்பான ஆட்டத்தில் 4ஆவது நிமிடத்தில் இங்கிலாந்து அணிக்கு கிடைத்த பெனால்ட்டி வாய்ப்பை அருமையான கோலாக மாற்றினார் கேப்டன் ரூனே. ஆனால் அடுத்த 2 நிமிடங்களிலேயே அதற்குரிய பதிலடியை ஐஸ்லாந்து கொடுத்தது. ஆட்டத்தின் 6ஆவது நிமிடத்தில் அந்த அணியின் ராக்னர் சிகரோஸன் ஒரு கோல் அடித்தார்.

இந்நிலையில், இங்கிலாந்து அணிக்கு அதிர்ச்சி அளிக்கும் வகையில் ஆட்டத்தின் 18ஆவது நிமிடத்தில் ஐஸ்லாந்து அணியின் கால்பெய்ன் சிக்போர்ஸன் ஒரு கோல் அடித்தார். இதனால், ஆட்டத்தின் பாதி நேரத்துக்கு முன்பாகவே 2-1 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்றது ஐஸ்லாந்து அணி.

ஆட்டத்தின் இரண்டாவது பாதியில் இங்கிலாந்து அணிக்கு கோல் வாய்ப்புகள் எதுவும் கிடைக்கவில்லை. எனவே ஐஸ்லாந்து அணி, இறுதியில் 2-1 என்ற கோல் கணக்கில் வென்று காலிறுதிச் சுற்றுக்கு முன்னேறியது. ஐஸ்லாந்து அணி அடுத்தச் சுற்றில், யூரோ கோப்பை போட்டியை நடத்தும் பிரான்ஸ் நாட்டின் அணியை எதிர்கொள்கிறது ஐஸ்லாந்து அணி.

இந்நிலையில், ஐஸ்லாந்துக்கு எதிரான தோல்வியை அடுத்து, இங்கிலாந்து பயிற்சியாளர் பொறுப்பில் இருந்து ராய் ஹாட்க்ஸன் விலகினார்.

Leave a Reply