shadow

யூரோ கால்பந்து: ஸ்பெயின் அணிக்கு 2வது தோல்வி. நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறியது
euro
யூரோ கோப்பை என்று கூறப்படும் ஐரோப்பிய கோப்பை கால்பந்து போட்டி தற்போது பிரான்ஸ் நாட்டில்  நடைபெற்று வருகிறது. நேற்று நடந்த ஆட்டம் ஒன்றில் ஸ்பெயின் – துருக்கி அணிகள் மோதின. விறுவிறுப்பாக நடந்த இந்த போட்டியில் ஸ்பெயின் 3-0 என்ற கோல் கணக்கில் துருக்கியை தோற்கடித்தது.

ஸ்பெயின் அணியின் அல்வாரா மொரடா 34வது நிமிடத்திலும், 48வது நிமிடத்திலும் என 2 கோல்கள் போட்டார். அந்த அணியின் நொலிடோ 37வது நிமிடத்தில் ஒரு கோல் அடித்தா. ஆனால் துருக்கி அணியால் கடைசி வரை ஒரு கோல் கூட போட முடியவில்லை.

இது ஸ்பெயின் பெற்ற 2-வது வெற்றியாகும். முதல் ஆட்டத்தில் செக் குடியரசுவை 1-0 என்ற கோல் கணக்கில் வென்று இருந்தது. இதன் மூலம் ஸ்பெயின் ‘நாக்அவுட்’ சுற்றுக்கு முன்னேறியது.

முதல் ஆட்டத்தில் 0-1 என்ற கோல் கணக்கில் குரோஷியாவிடம் தோல்வி அடைந்த துருக்கி இந்த போட்டியிலும் 0-3 என்ற கோல் கணக்கில் தோல்வி அடைந்ததால் அந்த அணி போட்டியில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளது.

Leave a Reply