யூரோ கோப்பை கால்பந்து கோப்பையை வெல்வது யார்? நாளை பிரான்ஸ்-போர்ச்சுக்கல் பலப்பரிட்சை

Euro cup football. France vs Portugalகடந்த சில நாட்களாக நடைபெற்று வந்த யூரோ கோப்பை கால்பந்து போட்டி தற்போது இறுதிக்கட்டத்திற்கு வந்துள்ளது. நாளை நடைபெறவுள்ள கோப்பையை வெல்லும் அணி எது என்பதை முடிவு செய்யும் இறுதிப்போட்டியில் பிரான்ஸ் மற்றும் போர்ச்சுக்கல் அணி மோதுகிறது. போர்ச்சுக்கல் அணி வேல்ஸ் அணியையும், பிரான்ஸ் அணி ஜெர்மனி அணியையும் அரையிறுதியில் வென்று இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

நேற்று நடைபெற்ற பிரான்ஸ் மற்றும் ஜெர்மனி அணிகளுக்கு இடையிலான அரையிறுதி போட்டியில் நடப்பு உலக சாம்பியனான ஜெர்மனியை 2-0 என்ற கோல் கணக்கில் பிரான்ஸ் தோற்கடித்தது. பிரான்ஸ் அணியின் நட்சத்திர வீரர் கிரிஸ்மான் இரு கோல்களை அடித்து அசத்தினார்.

இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது குறித்து கருத்து கூறிய பிரான்ஸ் பயிற்சியாளர் டெஸ்கேம்ப்ஸ், “இந்த ஆட்டம் கடுமையான ஆட்டம்தான். ஆனால் எங்கள் வீரர்கள் விடாப்பிடியாக போராடி வெற்றி கண்டுள்ளனர். எப்போதுமே எனது வீரர்கள் மீது நான் மிகுந்த நம்பிக்கை வைத்திருக்கிறேன். யூரோ கோப்பைக்கான பிரான்ஸ் அணியை ஒருங்கிணைப்பதற்காக நான் ஒரு வீரரை தேர்வு செய்தேன். அந்த வீரர் இப்போது சிறப்பாக ஆடி என்னை மகிழ்வித்துவிட்டார்’ என்று கூறினார்.

Euro cup football. France vs Portugal

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *