venuபிரபல தெலுங்கு காமெடி நடிகர் வேணு ஆந்திர போலீஸாரால் நேற்று கைது செய்யப்பட்டார். சமீபத்தில் பிரபல காமெடி நடிகர் வேணு, தொலைக்காட்சி காமெடி ஷோ ஒன்றில் ஒரு குறிப்பிட்ட ஜாதியை இழிவுபடுத்தும் வகையில் காட்சி அமைத்ததாக அந்த ஜாதியின் தலைவர்கள் கொடுத்த போலீஸ் புகார் காரணமாக அவர் ஒஸ்மானியா பல்கலைக்கழக போலீஸாரால் கைது செய்யப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தெலுங்கு தொலைக்காட்சியான ஈடிவியில் ‘ஜபர்தஸ்த்’ என்ற காமெடி ஷோ மிகவும் பிரபலம் வாய்ந்தது. இந்த காமெடி தொடரில் சமீபத்தில் ஒளிபரப்பான ஒரு எபிசோடில் ஒரு குறிப்பிட்ட ஜாதி குறித்து வேணு இழிவு படுத்தும் வகையில் காட்சிகள் அமைத்து நடித்ததாகவும், இதனால் அந்த ஜாதியினர் கடும் அதிர்ச்சி அடைந்ததாகவும் கூறப்படுகிறது.

இதனால் வேணுவை சில மர்ம நபர்கள் தாக்கியதாகவும், இதனால் படுகாயம் அடைந்த வேணு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளன. வேணு மீதான தாக்குதலுக்கு தெலுங்கு சின்னத்திரை நடிகர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் நடிகர் வேணு கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தப்பட்டார்.

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *