2005ஆம் ஆண்டுக்கு முன்னர் வெளியான ரூபாய் நோட்டுக்களை வரும் மார்ச் மாதம் 31ஆம் தேதிக்குள் வங்கியில் கொடுத்து தற்போதைய புதிய ரூபாய் மாற்றிக்கொள்ளும்படி இந்திய ரிசர்வ் வங்கி நேற்று விடுத்த ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
2005ஆம் ஆண்டுக்கு முன்னர் அச்சிடப்பட்டு வெளியான ரூபாய் நோட்டுக்களில் வருடம் குறிப்பிடப்பட்டு இருக்காது. அந்த ரூபாய் நோட்டுக்களை வங்கியில் கொடுத்து மாற்றிக்கொள்ளும்படி வரும் ஏப்ரல் மாதம் 1ஆம் தேதி அதன் பயன்பாடு நிறுத்தப்படும் என்றும் ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

எனினும் பொதுமக்கள் அச்சப்பட தேவையில்லை என்றும் கடைகளில் மற்றும் பொதுமக்கள் பயன்பாட்டுக்குத்தான் அந்த நோட்டுகள் செல்லாது என்றும் வங்கியில் தாராளமாக கொடுத்து மாற்றிக்கொள்ளலாம் என்றும் விளக்கம் அளித்துள்ளது.
மேலும் 500 ரூபாய், மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்களை அதிகளவு மாற்ற விரும்புபவர்கள் தங்கள் அடையாள அட்டை ஏதாவது ஒன்றை வங்கியில் காட்ட வேண்டும் என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே கருப்புப்பணத்தை பதுக்கி வைத்திருப்பவர்கள் நிலை திண்டாட்டமாக இருக்கும் என கருதப்படுகிறது.

Leave a Reply