shadow

 

jipmer

புதுச்சேரியில் உள்ள ஜிப்மர் மருத்துவ கல்லூரியில் சேர நுழைவுத்தேர்வு நடத்தப்படுகிறது.

அந்த வகையில், இந்தாண்டு ஜிப்பர் நுழைவுத்தேர்வு எம்.டி, எம்.எஸ் படிப்புக்களுக்கு வரும் 31-ம் தேதியும், எம்.பி.பி.எஸ் படிப்புக்கான நுழைவுத்தேர்வு ஜூன் 7-ம் தேதி நடைபெறுகிறது.

எம்.டி, எம்.எஸ் படிப்புக்கான தேர்வுகள் 30 நகரங்களிலும், எம்.பி.பி.எஸ் தேர்வு 75 நகரங்களில் நடைபெறுகிறது.

எம்.டி, எம்.எஸ்., தேர்வுக்கு மொத்தம் 1,37,435 பேரும், எம்.பி.பி.எஸ் தேர்வுக்கு 18,527 பேரும் விண்ணப்பித்துள்ளனர்.

எம்.பி.பி.எஸ் தேர்வு முடிவுகள் ஜூன் 15-ல் வெளியாகலாம். கலந்தாய்வு ஜூன் 22-ல் துவங்கப்படுகிறது. எம்.டி, எம்.எஸ் தேர்வு முடிவுகள் ஜூன் 5-ம் தேதி வெளியாக வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

கூடுதல் தகவல்களுக்கு www.jipmer.edu.in என்ற இணையதளத்தை பார்க்கலாம்.

Leave a Reply