cricketஇங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான ஐந்து ஒருநாள் போட்டிகளில் 3-2 என்ற கணக்கில் தொடரை வென்ற இங்கிலாந்து அணி, நேற்று ஒரே ஒரு 20-20 போட்டியில் நியூசிலாந்து அணியுடன் மோதி, இந்த போட்டியிலும் வெற்றி பெற்றது.,

டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 7 விக்கெட்டுக்களை இழந்து 191 ரன்கள் எடுத்தது. ரூட் 68 ரன்கள் எடுத்து அணிக்கு வலிமை சேர்த்தார்.

192 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் களமிறங்கிய நியூசிலாந்து அணி 16.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 135 ரன்கள் மட்டுமே எடுத்து 56 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. இந்த அணியின் வில்லியம்சன் மட்டும் சற்றே தாக்கு பிடித்து 57 ரன்கள் எடுத்தார். நியூசிலாந்து அணியின் 8 பேட்ஸ்மேன்கள் ஒற்றை இலக்கத்தில்தான் ரன் சேர்த்தனர் அதிலும், மூன்று பேட்ஸ்மேன்கள் டக் அவுட் என்பது குறிப்பிடத்தக்கது.

வரன் தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!
shadow

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *