shadow

india vs englandஇங்கிலாந்துக்கு எதிரான நடைபெற்ற 3வது கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 266 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது.

இந்திய இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான ஐந்து டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் நேற்று முடிந்த மூன்றாவது டெஸ்ட்டில் இந்திய அணி படுகேவலமாக தோல்வி அடைந்தது.

நேற்றைய ஐந்தாவது நாள் ஆட்டத்தில் 333 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் களமிறங்கிய இந்திய அணி, கைவசம் இருந்த ஆறு விக்கெட்டுக்களை போட்டி ஆரம்பித்த சில நிமிடங்களில் இழந்து படுதோல்வி அடைந்தது. கேப்டன் தோனி உள்பட ஆறு பேட்ஸ்மேன்கள் ஒற்றை இலக்கத்தில் ரன் எடுத்து இந்தியாவின் தோல்விக்கு காரணமாகி உள்ளனர்.

இந்திய அணி தனது இரண்டாவது இன்னிங்ஸில் 178 ரன்கள் மட்டுமே எடுத்து படுதோல்வி அடைந்தது. ரஹானே மட்டுமே ஓரளவிற்கு நிலைத்து ஆடி ஆட்டமிழக்காமல் 52 ரன்கள் எடுத்தார்.

ஸ்கோர் விபரம்”

முதல் இன்னிங்ஸ்

இங்கிலாந்து    569/10 163.4 ஓவர்கள்

இந்தியா        330/10  106.1 ஓவர்கள்

இரண்டாவது இன்னிங்ஸ்

இங்கிலாந்து    205/4  40.4 ஓவர்கள்

இந்தியா        178/10  66.4 ஓவர்கள்

Leave a Reply