வெற்றியை நெருங்கிவிட்ட இந்தியா: இன்னும் ஒரே ஒரு விக்கெட்

இங்கிலாந்து அணிக்கு எதிராக விளையாடி வரும் இந்திய அணி வெற்றியை நெருங்கிவிட்டது. இன்னும் ஒரே ஒரு விக்கெட் வீழ்ந்தால் இந்தியா வெற்றி பெற்றுவிடும்

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் நாட்டிங்காம் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றி பெற 521 ரன்கள் இலக்கு கொடுக்கப்பட்டது.

ஆனால் இந்திய அணியின் அபார பந்துவீச்சால் அந்த அணி நேற்றைய ஆட்டநேர முடிவில் 9 விக்கெட்டுக்கள் இழப்பிற்கு 311 ரன்கள் எடுத்துள்ளது. இங்கிலாந்து வெற்றி பெற இன்னும் 210 ரன்களும், இந்திய அணி வெற்றி பெற இன்னும் ஒரே ஒரு விக்கெட்டும் தேவை என்பதால் இந்தியா இந்த டெஸ்ட்டில் வெற்றி பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இங்கிலாந்து அணியின் பட்லர் 106 ரன்களும், ஸ்டோக்ஸ் 62 ரன்களும் எடுத்துள்ளனர். இந்திய தரப்பில் பும்ரா ஐந்து விக்கெட்டுக்களை வீழ்த்தியுள்ளார்.

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *