shadow

உலகக்கோப்பை டி-20 கிரிக்கெட் போட்டி: இறுதிப்போட்டிக்கு இங்கிலாந்து தகுதி

ICC World Twenty20 India 2016: Semi-Final: England v New Zealandஉலகக்கோப்பை டி-20 கிரிக்கெட் போட்டியின் முக்கிய போட்டியான முதல் அரையிறுதி போட்டி நேற்று டெல்லி மைதானத்தில் நியூசிலாந்து மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெற்றது. இந்த போட்டி தொடரில் ஒரு தோல்வியையும் சந்திக்காத நியூசிலாந்து அணி, நேற்றைய அரையிறுதி போட்டியில் 7 விக்கெட் வித்தியாசத்தில் அதிர்ச்சி தோல்வி அடைந்தது.

நேற்றைய போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி, நியூசிலாந்து அணியை பேட்டிங் செய்ய கேட்டுக்கொண்டது. முதலில் களத்தில் இறங்கிய நியூசிலாந்து அணி, இங்கிலாந்து பந்துவீச்சாளர்களின் அபார பந்துவீச்சு காரணமாக ரன் எடுக்க திணறியது. நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் அந்த அணி 8 விக்கெட்டுக்களை இழந்து 153 ரன்கள் எடுத்தது. முன்றோ 46 ரன்களும், கேப்டன் வில்லியம்சன் 32 ரன்களும் எடுத்தனர்.

154 ரன்கள் எடுத்தால் இறுதிப்போட்டிக்கு தகுதி பெறலாம் என்ற நிலையில் களமிறங்கிய இங்கிலாந்து அணி, 17.1 ஓவர்களில் 3 விக்கெட்டுக்களை மட்டும் இழந்து 159 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. தொடக்க ஆட்டக்காரர் ராய் 44 பந்துகளில் 78 ரன்கள் குவித்து வெற்றிக்கு வித்திட்டதோடு ஆட்டநாயகனாகவும் தேர்வு செய்யப்பட்டார். இன்று இந்தியா மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகள் இரண்டாவது அரையிறுதியில் மோதுகின்றன.

Leave a Reply