shadow

மும்பையில் தோசை சுட்டார் இங்கிலாந்து இளவர்சர் வில்லியம்ஸ்

williamsஇந்தியாவில் ஒருவாரம் சுற்றுப்பயணம் செய்ய வருகை தந்துள்ள இங்கிலாந்து இளவரசர் மற்றும் அவரது மனைவி கேத் மிடில்டன் ஆகியோர் மும்பை, கவுகாத்தி, ஆக்ரா நகரில் உலக அதிசயங்களில் ஒன்றான தாஜ் மஹால் உள்பட நாட்டிலுள்ள பல்வேறு முக்கிய இடங்களையும் சுற்றிப் பார்க்கவுள்ளனர். இந்நிலையில் மும்பை தாஜ் ஹோட்டலில் தங்கியுள்ள அரச குடும்பத்து தம்பதிகள் நேற்று ‘ஸ்ட்ராட் அப் இந்தியா’ நிகழ்ச்சியில் பங்கேற்றனர். இந்த நிகழ்ச்சியில் வீட்டு உபயோகப் பொருட்கள், மின்சார உபகரணங்கள் உள்ளிட்ட நவீன கண்டுபிடிப்புகள் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தன. அவற்றில் வில்லியம்ஸ்-மிடில்டன் தம்பதியினர்களை கவர்ந்த ஒன்று நவீனரக தோசை தயாரிக்கும் இயந்திரம் என்பது குறிப்பிடத்தக்கது

தோசை தயாரிக்கும் இயந்திரத்தை அதிசயமாக பார்வையிட்ட வில்லியம் – கேத் தம்பதியர், அது இயங்கும் விதம்பற்றி தயாரிப்பாளரான ஈஷ்வர் விகாஸ் என்பவரிடம் ஆர்வமாக கேட்டறிந்தனர். பின்னர், அந்த இயந்திரத்தில் உள்ள தோசைக் கல்லில் இளவரசர் வில்லியம் ஒரு கரண்டி மாவை ஊற்ற, தானியங்கி முறையில் ஒரு நிமிடத்துக்குள் முறுமுறுப்பான ‘கமகம’ தோசை வெளியே வந்தது. அந்த தோசையின் சிறுபகுதியை சுவைத்து மகிழந்த வில்லியம் – கேத் தம்பதியர், இந்த ‘தோசை அனுபவம்’ மிக இனிமையாக இருந்ததாக தெரிவித்தனர்.

முன்னதாக அரச குடும்பத்து தம்பதிகளுக்கு பாலிவுட் நடிகர்கள் ஷாருக் கான், ஆமிர் கான், அனில் கபூர், ரிஷி கபூர், ஹ்ரித்திக் ரோஷன், பர்ஹான் அக்தர், நடிகைகள் ஐஸ்வர்யா ராய் பச்சன், மாதுரி திட்சித், அடிட்டி ராவ் ஹைதரி, ஹுமா குரைஷி, பழம்பெரும் நடிகர் ரிஷி கபூர், அவரது மனைவி நீட்டு, பாடகரும் இசையமைப்பாளருமான ஷங்கர் மஹாதேவன், ஓய்வுபெற்ற கிரிக்கெட் வீரர் சச்சின் தெண்டுல்கர் உள்ளிட்ட பல்துறை பிரபலங்கள் சிறப்பான வரவேற்பை அளித்தனர் என்பது குறிப்பிடத்தகக்து.

Leave a Reply