shadow

ஆன்லைனில் மட்டுமே பொறியியல் விண்ணப்பம். அண்ணா பல்கலை அறிவிப்பு

397433-anna-university-wikiதமிழகம் மற்றும் புதுச்சேரியில் வரும் ஏப்ரல் மாதம் 1ஆம் தேதி 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவடைகிறது. இதனையடுத்து மாணவர்கள் பொறியியல் படிப்புகளுக்கு விண்ணப்பிக்க வசதியாக வரும் ஏப்ரல் 15 முதல் பொறியியல் படிப்புக்கான விண்ணப்பங்கள் ஆன்லைனில் பெறலாம் என அண்ணா பல்கலைகழகம் தெரிவித்துள்ளது. மேலும் இந்த வருடம் பிரிண்ட் வடிவில் விண்ணப்பங்கள் வழங்கப்படாது என்றும் ஆன்லைனில் மட்டுமே மாணவர்கள் விண்ணப்பிக்க வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து சென்னையில் நேற்று பத்திரிகையாளர்களை சந்தித்த அண்ணா பல்கலைகழக பதிவாளர் கணேசன் கூறியபோது, “ஆன்லைன் மூலம் பெறப்பட்ட விண்ணப்பங்கள் அனைத்தும், 12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியான 10 நாட்களுக்குள் நிரப்பப்பட்டு சமர்ப்பிக்கப்பட வேண்டும் என்றும் விண்ணப்பங்கள் பெறுவதற்கான வழிமுறைகள் குறித்து தெரிந்துகொள்ள, தமிழகம் முழுவதும் 60 உதவிமையங்கள் அமைக்கப்படும் கூறினார். இந்த உதவி மையங்கள் எந்தெந்த இடங்களில் அமைக்கப்படும் என்பது குறித்து விரைவில் முடிவு செய்யப்படும் என்றும் கணேசன் கூறினார்.

இந்த ஆண்டு 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வின் கேள்விகள் கடினமாக இருந்ததால் கட் ஆப் மதிப்பு வெகுவாக குறைந்திருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும் பொறியியல் படிப்புகளை பொறுத்தவரை ஒவ்வொரு ஆண்டும் காலியான இடங்கள்தான் அதிகம் இருப்பதால் விண்ணப்பிக்கும் மாணவர்கள் அனைவருக்கு இடம் கிடைத்துவிடும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply