shadow

தனுஷ் நடிப்பில் கவுதம் மேனன் இயக்கும் ‘என் மேல் பாயும் தோட்டா”
dhanushgautham
கோலிவுட் திரையுலகில் மிகவும் பிசியான நடிகர்களில் ஒருவர் தனுஷ் என்பது அனைவரும் அறிந்ததே. கோலிவுட்டில் மட்டுமின்றி பாலிவுட், ஹாலிவுட் என தனது எல்லைகளை விரிவுபடுத்தி கொண்டே போகும் தனுஷ், ஓய்வின்றி படப்பிடிப்பில் கலந்து கொண்டு வருகிறார்.

தற்போது ‘கொடி’ படத்தில் நடித்து கொண்டிருக்கும் தனுஷ், அடுத்து வெற்றிமாறனின் ‘வடசென்னை’ படப்பிடிப்பில் கலந்து கொள்ளவுள்ளார். இந்நிலையில் ‘என்னை அறிந்தால்’ படத்தை அடுத்து இயக்குனர் கவுதம்மேனன், தனுஷ் நடிக்கும் படத்தை இயக்கவுள்ளார் என்று செய்திகள் வெளியான நிலையில் தற்போது அந்த படம் உறுதியாகிவிட்டதாகவும், வரும் மார்ச் முதல் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்த படத்திற்கு ‘என் மேல் பாயும் தோட்டா” என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளதாகவும், அதிரடி ஆக்சன் படமான இந்த படத்தில் நடிக்கும் நாயகி தேர்வு நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது. ஹாரீஸ் ஜெயராஜ் இசையமைக்கவுள்ள இந்த படத்தின் தனுஷ் இதுவரை நடித்திராத முற்றிலும் வித்தியாசமான கேரக்டரில் நடிக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Chennai Today News: En Mel Paayum Thotta. The title of Dhanush-Gautham Menon film

Leave a Reply