shadow

பிரான்ஸ் அதிபர் தேர்தல்: 64 வயது பெண்ணின் 39 வயது கணவர் வெற்றி

பிரான்ஸ் நாட்டின் அடுத்த அதிபராக 64 வயது பெண்ணின் 39 வயது கணவரான இமானுவேல் மக்ரான் 65 சதவிகித வாக்குகளை பெற்று வெற்றி பெற்றுள்ளார். இவர் அடுத்த அதிபர் ஆவது தற்போது உறுதியாகியுள்ளது. இமானுவேலுக்கு பிரதமர் மோடி, அமெரிக்க அதிபர் டிரம்ப் உள்பட உலகத்தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

பிரான்ஸ் நாட்டின் அதிபர் தேர்தல் முதல்கட்டமாக கடந்த மாதம் 23ஆம் தேதியும், இரண்டாவது கட்ட தேர்தல் சமீபத்திலும் நடைபெற்றது. இந்த இரண்டு கட்ட தேர்தலில் போட்டியிட்ட இமானுவல் மக்ரான், மற்கீம் இடது சாரிகள் சார்பில் ஜீன்-லக் மெலன்சான் ஆகிய நான்கு வேட்பாளர்களில் இமானுவேல் மக்ரான் 65 சதவிகித வாக்குகளை பெற்று வெற்றி பெற்றுள்ளார்.

இமானுவேல் மக்ரானுக்கு கடும் போட்டியாக இருந்த மெரீன் கடைசி கட்டத்தில் தோல்வி அடைந்ததால், தனது தோல்வியை ஏற்று கொண்டு மக்ரானுக்கு வாழ்த்து தெரிவித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மெரீன், வலிமையான எதிர்க்கட்சியாக செயல்படுவோம் என தெரிவித்தார்.

Leave a Reply