schoolபள்ளிக்கு செல்லாமல் இருக்கும் மாணவர்களை கண்டறிய எலக்ட்ரானிக் சிப் பொருத்திய அடையாள அட்டைகளை அறிமுகப்படுத்த, தில்லி மாநில அரசு திட்டமிட்டுள்ளது.

தில்லி அரசின் புதிய திட்டம் பற்றி, துணை முதல்வர் மணீஷ் சிசோடியா, நிருபர்களிடம் நேற்று கூறியதாவது:

தில்லியில் சுமார் ஆயிரத்துக்கு மேற்பட்ட அரசு பள்ளிகள் உள்ளன. அவற்றில், 15 லட்சம் பேர் மாணவர்கள் பயின்று வருகின்றனர். இந்நிலையில், மாணவ-மாணவியர், பள்ளிக்கு செல்லாமல் இருப்பதை கண்காணித்து நடவடிக்கை எடுக்கவும், அவர்களின் பெற்றோருக்கு தெரிவிக்கவும் எலக்ட்ரானிக் சிப் பொருத்தப்பட்ட அடையாள அட்டைகளை மாணவர்களுக்கு வழங்க தில்லி அரசு திட்டமிட்டுள்ளது.

பள்ளியில் நிறுவப்படும் கண்காணிப்பு கேமராக்களுடன் எலக்ட்ரானிக் அடையாள அட்டைகள் இணைக்கப்படுவதால், மாணவ, மாணவியரின் நடமாட்டத்தையும், அவர்கள் பள்ளிக்கு வராததையும் சுலபமாக கண்டறிய முடியும்.

எனவே, தில்லியில் அறிவியல், விளையாட்டு, வணிகம் போன்ற பல்வேறு துறைகளில் தனித்துவத்துடன் கல்வி வழங்கும், 10 பள்ளிகள் கொண்ட பள்ளி கிராமத்தை நிர்மாணிக்க தில்லி அரசு திட்டமிட்டுள்ளது. இதற்காக, கிழக்கு தில்லியில் 30 ஏக்கர் நிலம் ஒதுக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இத்திட்டம் ஓராண்டில் துவங்கப்படும் என்று மணீஷ் சிசோடியா கூறினார்.

வரன் தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!
shadow

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *