shadow

ஓடும் ரயிலில் இருந்து மின்சாரம் தயாரிக்க இந்திய ரயில்வே முடிவு. அமைச்சர் சுரேஷ்பிரபு
train 1
இந்திய ரயில்வே மூலம் ஆண்டுக்கு ஆயிரம் மெகாவாட் அளவிற்கு காற்றாலை மற்றும் சூரிய ஒளி மின்சாரம் உற்பத்தி செய்யப்படும் என்றும் அவ்வாறு உற்பத்தியாகும் மின்சாரங்கள் ரயில்வே துறைக்கே பயன்படுத்தப்படும் என்றும் மத்திய ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு தெரிவித்துள்ளார்.

ஓடும் ரயில் இருந்து காற்றாலை மற்றும் சூரிய மின்சாரம் தயாரிக்கும் திட்டம் குறித்த ஆலோசனை கடந்த சில ஆண்டுகளாக இருந்து வந்த நிலையில் நேற்று டெல்லியில் ரயில்வேதுறை சார்பில் 26 மெகாவாட் திறன் கொண்ட காற்றாலை மின் உற்பத்தி நிலையம் அமைப்பதற்கான தொடக்கவிழா நடந்தது. இந்த விழாவில்
ரயில்வே துறை அமைச்சர் சுரேஷ் பிரபு கலந்து கொண்டார்.

உறைந்த நிலையில் உள்ள எரிபொருள்களை தவிர்த்து காற்றாலை மற்றும் சூரிய ஒளி மூலம் ரயில்வே துறை தயாரிக்கப்படும் மின்சாரத்தை ரயில்வே போக்குவரத்திற்கு பயன்படுத்துவதால் ஏற்படும் நன்மைகளை குறித்து அமைச்சர் விரிவாக பட்டியலிட்டார். இந்த திட்டம் வெற்றி பெற்றல் சுற்றுச்சூழல் பாதுகாக்கப்படுவதுடன், ரயில்வே துறைக்கு அதிக லாபம் கிடடக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.

Leave a Reply