shadow

5

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் கடந்த சில நாட்களாக அனைத்து அரசியல் கட்சியினராலும் அனல் பறக்கும் வகையில் நடைபெற்று தேர்தல் பிரசாரம், இன்று  மாலை 6 மணியுடன் முடிவு பெறுகிறது.

இந்த தேர்தலில் மொத்தம் 845 பேர் தமிழ்நாட்டில் உள்ள 40 தொகுதிகளில் போட்டியிடுகின்றனர். வரும் வியாழக்கிழமை  காலை 7 மணிக்குவாக்குப்பதிவு தொடங்குகிறது. எனவே 48 மணி நேரத்துக்கு முன்பு பிரச்சாரத்தை முடிக்க வேண்டும் என்ற தேர்தல் கமிஷனின் ஆணைப்படி இன்றுடன் பிரச்சாரம் முடிகிறது.

இன்று மாலை 6 மணிக்குப் பிறகு தேர்தல் பிரசாரம் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. பொதுக்கூட்டங்களோ, மேடைகளோ போட்டு ஆறு மணிக்கு பிறகு பிரச்சாரம் செய்யக்கூடாது. மேலும் இணையதளங்களிலும், செல்போன்கள் மூலமும் பிரச்சாரம் செய்வதும் தடை செய்யபப்ட்டுள்ளது. கருத்துக்கணிப்பு மற்றும் அரசியல் விவாதங்கள், பிரச்சாரம் குறித்த குறும்படங்கள் ஆகியவற்றை ஒலிபரப்ப ஊடகங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

தேர்தல் ஆணையத்தின் விதிகளை மீறி இன்று மாலை ஆறு மணிக்கு மேல் பிரச்சாரம் செய்தால் இரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்படும் என தேர்தல் ஆணையம் எச்சரித்துள்ளது.

Leave a Reply