shadow

12

தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பை ஏறி விடுமுறை அளிக்காத நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க தேர்தல் ஆணையத்தின் அதிரடிப்படை தமிழகம் முழுவதும் தீவிர சோதனை நடத்தியது. இதில் சென்னையை சேர்ந்த நான்கு ஐ.டி. நிறுவனங்கள் ஊழியர்களுக்கு வாக்களிக்க விடுமுறை கொடுக்காத மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. நான்கு ஐ.டி. நிறுவனங்களும் இழுத்து மூடப்பட்டது.

சென்னை சோழிங்கநல்லூரில் செயல்பட்டு வந்த இந்த நான்குநிறுவனங்களில் பணிபுரியும் 3500 ஊழியர்கள் உடனடியாக வெளியேற்றப்பட்டனர். அலுவலகத்தின் கேட்டை இழுத்து பூட்டி சீல் வைத்த தேர்தல் அதிகாரிகள், நான்கு நிறுவனங்களின் உயரதிகாரிகள் மீது வழக்கு பதிவு செய்தனர். இதனால் சென்னையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இதேபோல் திருநெல்வேலி நகரில் உள்ள சென்னை சில்க்ஸ் நிறுவனம், தங்கள் ஊழியர்கள் வாக்களிக்க விடுமுறை தராமல் கடையை திறந்து வைத்தது. இதுகுறித்து நெல்லை தேர்தல் ஆணையம் அலுவலகத்திற்கு வந்த ரகசிய எஸ்.எம்.எஸ் வந்ததை அடுத்து உடனடியாக சென்னை சில்க்ஸ் கடைக்கு வந்த அதிகாரிகள் ஊழியர்களை வெளியேற்றிவிட்டு கடையை மூடி சீல் வைத்தனர்.

Leave a Reply