ஏற்காடு தொகுதி இடைத்தேர்தலின்போது, ஒவ்வொரு வாக்குப்பதிவு மையத்திலும் உள்ளூர் போலீசார் பாதுகாப்புப் பணியில் இருப்பார்கள். தேர்தல் நாளன்று, அவர்களுடன் சேர்ந்து 120 இடங்களில் மத்திய துணை ராணுவப் படையினரும் பணியில் ஈடுபடுவர். பதற்றம் நிறைந்ததாகவோ அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட வாக்குப்பதிவு மையங்கள் உள்ளதாகவோ கண்டறியப்பட்ட 61 இடங்களில், ஆயுதப்படை போலீசாரும் பணியில் அமர்த்தப்பட உள்ளனர். அவசரப் பாதுகாப்புப் பணியில் ஈடுபட, 43 அதிரடிப்படை தயார் நிலையில் இருக்கும்.

மொத்தம் உள்ள 290 வாக்குப்பதிவு மையங்களில், 269 மையங்கள் ஆன்லைனில் கண்காணிக்கப்படும். மற்ற 21 மையங்களில் வாக்குப்பதிவு முழுவதும் வீடியோவில் பதிவு செய்யப்படும். இந்தப் பணிகளில் மத்திய அரசு ஊழியர்கள் ஈடுபடுத்தப்படுவர். வாக்குப்பதிவு மையங்களை கண்காணிக்க, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கண்காணிப்பு அறை அமைக்கப்பட உள்ளது என தலைமை தேர்தல் அதிகாரி பிரவீன் குமார் தெரிவித்துள்ளார்.

Leave a Reply