shadow

mamtaதேர்தல் ஆணையத்தின் இடமாற்ற உத்தரவை மேற்கு வங்க அரசு ஏற்றுக்கொள்ளாவிட்டால், அந்த மாநிலத்தில் தேர்தல் ரத்து செய்யப்படும் என்று  தேர்தல் ஆணையம் மம்தா பானர்ஜிக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.

மேற்கு வங்க மாநிலத்தில் 5 எஸ்.பிக்கள் மற்றும் ஒரு கலெக்டர் ஆகியோரை தேர்தல் ஆணையம் அண்மையில் இடமாற்றம் செய்து நேற்று உத்தரவிட்டிருந்தது. இதற்கு பதிலளித்த மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி “மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு மாநில அரசின் உரிமையில் தலையிடுவதற்கு தேர்தல் ஆணையத்திற்கு உரிமை இல்லை என்றும், அதிகாரிகளின் இடமாற்றத்திற்கு முன் தேர்தல் ஆணையம் மாநில அரசுடன் கலந்து ஆலோசித்திருக்க வேண்டும் என்று கூறியதோடு, தேர்தல் ஆணையத்தின் உத்தரவுப்படி அதிகாரிகளை இடமாற்றம் செய்ய முடியாது என்று கூறிவிட்டார். முடிந்தால் என்னை டிஸ்மிஸ் செய்துகொள்ளுங்கள் அல்லது கைது செய்யுங்கள் என்று தேர்தல் ஆணையத்திற்கு சவால்விட்டார்.

இதற்கு பதிலடி கொடுத்துள்ள தேர்தல் ஆணையம், “அதிகாரிகளின் இடமாற்ற உத்தரவை திரும்பப்பெற முடியாது என்றும், தேவைப்பட்டால் மேற்குவங்கத்தில் வாக்குப்பதிவை ரத்து செய்ய தயங்கமட்டோம் என்றும் கூறியுள்ளார்.

இந்த பிரச்சனை காரணமாக மேற்குவங்கத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Leave a Reply