shadow

7

 

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 பாராளுமன்ற தொகுதிகளிலும் இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. பொதுமக்கள் நீண்ட வரிசையில் நின்று ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர்.

இந்த தேர்தலுக்காக தமிழகத்தில் 60,818 வாக்குச்வாடிகள் அமைக்கப்பட்டுள்ளது. 5 கோடியே, 50 லட்சத்து, 42 ஆயிரத்து, 876 வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர்.

7a

தமிழகம், புதுவை தவிர மகாராஷ்டிரா, உத்தரபிரதேசம், மத்தியபிரதேசம்,பீகார், சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களிலும் இன்று தேர்தல் நடந்து வருகிறது.

இன்று காலை 7.10 மணிக்கு சென்னை ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரியில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஓட்டு போட்டார். அவரிடம் நிருபர்கள் கேள்வி கேட்க முயன்ற போது அவர் பதிலளிக்காமல் வேகமாக சென்றுவிட்டார். அதேபோல் ஆழ்வார்பேட்டையில் கமல்ஹாசன் ஓட்டுபோட்டார். கமல்ஹாசனுடன் நடிகை கவுதமியும் வந்திருந்தார்.

புதுச்சேரியில் உள்ள ஒரு தொகுதிக்கும், ஆலந்தூர் சட்டமன்ற தொகுதிக்கும் இன்று தேர்தல் நடந்து வருகிறது.

Leave a Reply