நிவாரண தொகைக்காக புலிக்கு இரையாக்கப்படும் பெரியவர்கள்! அதிர்ச்சி தகவல்

உத்தரப்பிரதேச மாநிலம் பிலிப்பிட் புலிகள் காப்பகம் அமைந்துள்ளது. அதன் அருகே உள்ள கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் தொடர்ந்து புலிகளுக்கு இரையாகி வருவது அதிர்ச்சியளிக்கிறது. இதுதொடர்பாக வன உயிர் குற்றத் தடுப்பு ஆணையம் ஆய்வு மேற்கொண்டது. அதில் அதிர்ச்சி தரும் தகவல் வெளியாகியுள்ளது. உத்தரப்பிரதேச மாநில அரசு சிறப்பு நிவாரணத் தொகையை வழங்கி வருகிறது.

அதனைப் பெறுவதற்காக கிராம மக்கள், தங்கள் இல்லங்களில் உள்ள முதியவர்களை புலிகளுக்கு இரையாக வனப்பகுதிகளுக்கு அனுப்பி வைக்கின்றனர். மேலும் தங்களின் நிலைக் கருதி, முதியவர்கள் தாங்களாகவே வனப்பகுதிக்கு சென்று புலிக்கு இரையாகி விடுகின்றனர்.

வயதான காலத்தில் பெற்றோர்களை பாதுகாக்க இயலாமல், அவர்களை இவ்வாறு பலியிடுவது மிகவும் அதிர்ச்சிதரும் செய்தியாகும். இதனை எதேச்சையான விபத்துக்கள் என்று கிராம மக்கள் நாடகமாடி வந்துள்ளனர். தற்போது உண்மை நிலவரம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *