shadow

தொழுகையை விட ஃபேஸ்புக் மேலானதா? சிக்கலில் மாட்டிய எகிப்து மசூதி இமாம்

mosqueவிடிகாலை தூக்கத்தை விட தொழுகை முக்கியமானது என்று அறிவிப்பதற்கு பதிலாக பேஸ்புக்கில் நேரத்தை செலவிடுவதை விட தொழுகை மேலானது” என்று அழைப்பு விடுத்த எகிப்து நாட்டு இமாம் ஒருவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அங்கிருந்து வரும் செய்திகள் கூறுகின்றன.

எகிப்து நாட்டில் உள்ள நைல் நதிக்கரையோரம் அமைந்துள்ள பெஹைரா மாகாணத்தில் உள்ள ஒரு மசூதியில் தினந்தோறும் அதிகாலை தொழுகைக்கு அழைப்பு விடுக்கும் வழக்கத்தை உடையவர் மசூதி இமாம் முகமது அல் மொகாசி. இவர் நேற்று மட்டும் வித்தியாசமாக அழைப்பு விடுத்தார். தூக்கத்தை விடத் தொழுகை மேலானது என்ற வழக்கமான அழைப்பிற்கு பதிலாக, பேஸ்புக்கில் நேரத்தை செலவிடுவதை விட தொழுகையே மேலானது என்று அவர் மைக்கில் அழைப்பு விடுத்தார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த பகுதி மக்கள் மசூதி இமாம் மீது புகார் அளித்தனர். இதன்பேரில் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Leave a Reply