shadow

சென்னை எழும்பூர்-தாம்பரம் இடையே மின்சார ரயில் சேவை தொடங்கியது!
train2
எழும்பூர்-தாம்பரம் இடையே மின்சார ரயில் சேவை இன்று காலை மீண்டும் தொடங்கியது. விரைவு ரயில் பாதையில் மின்சார ரயில்கள் இயக்கப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

கனமழை காரணமாக நிறுத்தப்பட்டிருந்த, சென்னை புறநகர் ரயில் போக்குவரத்து இன்று மீண்டும் தொடங்கி உள்ளது. ஆனாலும், எழும்பூரில் இருந்து தாம்பரம் வரை மட்டுமே புறநகர் ரயில்கள் இயக்கப்படுகின்றன.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கடந்த சில நாட்களாக பெய்த பலத்த மழை காரணமாக ரயில் தண்டவாளங்களில் மழைநீர் தேங்கியது. இதை தொடர்ந்து சென்னை கடற்கரை, தாம்பரம் இடையிலான ரயில் போக்குவரத்து கடந்த 1-ம் தேதி நிறுத்தப்பட்டது. இந்நிலையில், நேற்று சோதனை ஓட்டம் நடத்தப்பட்டதை தொடர்ந்து, இன்று காலை முதல் எழும்பூர்-தாம்பரம் இடையே புறநகர் ரயில் போக்குவரத்து தொடங்கப்பட்டு உள்ளது.

மேலும், சென்னை பூங்கா மற்றும் கடற்கரை ரயில் நிலையங்களில் தேங்கியுள்ள மழைநீர் அகற்றப்பட்ட பின்னர், கடற்கரை – தாம்பரம் இடையிலான ரயில் சேவை தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, தாம்பரம்-செங்கல்பட்டு மார்க்கத்தில், சேதமடைந்த தண்டவாளங்களை சீரமைக்கும் பணியில் ரயில்வே ஊழியர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

இரண்டு நவீன தண்டவாளம் சீரமைக்கும் சிறப்பு வாகனத்தின் உதவியுடன், சீரமைப்புப் பணி நடைபெற்று வருகிறது. இந்த பணிகள் முடிவடைந்ததும் தாம்பரத்தில் இருந்து செங்கல்பட்டு மார்க்கமாக மின்சார ரயிலை இயக்க அதிகாரிகள் தீவிரம் காட்டி வருகின்றனர்.

English Summary: Egmore to Tambaram suburban train services started

Leave a Reply