shadow

எஸ்.வி.சேகர் ஜூன் 20ஆம் தேதி ஆஜராக சம்மன்

பெண் பத்திரிகையாளர்கள் குறித்து சர்ச்சைக்குரிய கருத்தை தனது முகநூலில் பதிவு செய்த பாஜக பிரமுகரும், நடிகருமான எஸ்.வி.சேகர் மீது வழக்கு தொடுக்கப்பட்டுள்ள நிலையில் அவரை கைது செய்ய எந்த தடையும் இல்லை என்று சென்னை ஐகோர்ட் மற்றும் டெல்லி சுப்ரீம் கோர்ட் ஆகியவை உத்தரவிட்டுள்ளது என்பது தெரிந்ததே

இந்த நிலையில் பெண் பத்திரிகையாளர்கள் குறித்து அவதூறாக பேசிய வழக்கில் ஜூன் 20ஆம் தேதி காலை 10 மணிக்கு எஸ்.வி.சேகர் ஆஜராக எழும்பூர் நீதிமன்ற தலைமை மாஜிஸ்திரேட் சம்மன் அனுப்பியுள்ளார். எனவே அன்றைய தேதியில் எஸ்.வி.சேகர் நீதிமன்றத்தில் ஆஜராவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் எஸ்.வி.சேகர் மிகப்பெரிய கிரிமினல் குற்றம் எதையும் செய்யவில்லை என்றும், எஸ்.வி.சேகர் விவகாரத்தில் சட்டம் தன் கடமையை செய்யும் என்றும் தமிழக அமைச்சர் பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.

Leave a Reply