பள்ளிக்கல்வித்துறை ஆணை!

அரசு பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் பள்ளிக்கு வர வேண்டிய அவசியமில்லை என பள்ளிகல்வித்துறை ஆணை பிறப்பித்துள்ளது

கடந்த சில நாட்களுக்கு முன்னர் பத்தாம் வகுப்பு தேர்வு ஜூன் ஒன்றாம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. தேர்வு நடத்துவதற்கான நடவடிக்கைக்காக அரசு பள்ளி ஆசிரியர்கள் மற்றும் அரசு உதவி பெறும் ஆசிரியர்கள் பள்ளிக்கு வரவேண்டும் என சுற்றறிக்கை அனுப்பப்பட்டு இருந்தது

ஆனால் தற்போது பத்தாம் வகுப்பு தேர்வு ஜூன் 1-ஆம் தேதி ஜூன் 15ஆம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது. எனவே அரசுப் பள்ளிகள் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் பள்ளிக்கு வர வேண்டிய அவசியமில்லை என புதிய சுற்றறிக்கை ஒன்று தரப்பட்டுள்ளது

இந்த சுற்றறிக்கையால் அரசுப் பள்ளிகள் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.

Leave a Reply