shadow

russia-obama-mexico-g20-summitரஷ்யாவுடன்  இணைவதற்கு கிரிமியா பகுதியின் 95% பேர் வாக்களித்துள்ளதை அமெரிக்கா ஏற்க மறுத்துள்ளது. இந்த வாக்கெடுப்பு சட்டத்திற்கு புறம்பானது என்றும், கிரிமியாவை ஆக்கிரமிக்க ரஷ்யா முடிவு செய்தால், அந்த நாட்டின் மீது பொருளாதார தடை விதிக்கப்படும் என்றும் அமெரிக்க அதிபர் ஒபாமா எச்சரிக்கை விடுத்துள்ளார்.

நேற்று கிரிமியா பகுதியில் ரஷ்யாவுடன் இணைவதா அல்லது வேண்டாமா என்பதற்கான பொது வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதில் 95% பேர் ரஷ்யாவுடன் இணைவதற்கு  ஆதரவாக வாக்களித்து உள்ளனர். 5% பேர் மட்டுமே உக்ரைனுடன் தொடர்ந்து நீடிக்க வாக்களித்து உள்ளனர்.

இந்த வாக்கெடுப்பு சட்டபூர்வமானது என்றும் அரசியல் சட்டத்திற்கு உட்பட்டுதான் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது என்றும் ரஷ்ய அதிபர் புதின் அமெரிக்க அதிபர் ஒபாமாவிடம் விளக்கம் அளித்துள்ளார். ஆனால் ஒபாமா இதை ஏற்க மறுத்துவிட்டார். இதனால் அநத பகுதியில் தொடர்ந்து பதட்டம் நீடித்து வருகிறது.

Leave a Reply