shadow

ஜெயிலுக்கு சென்றும் சசிகலாவை விடாமல் துரத்தும் தேர்தல் ஆணையம்

‘இரட்டை இலை’ விவகாரம் குறித்து அதிமுக பொதுச்செயலாளர் சசிகலாவுக்கு பதில் துணை பொதுச்செயலாளர் டிடிவி தினகரனின் கருத்தை மறுத்த தேர்தல் ஆணையம், சசிகலாதான் பதில் சொல்ல வேண்டும் என்று கடந்த மாதம் உத்தரவிட்டது. இதேபோல் தற்போது முடக்கப்பட்ட இரட்டை இலை சின்னத்தை டிடிவி தினகனின் ஆதரவாளர்கள் சமூக வலைத்தளங்களில் பயன்படுத்தி வருவது குறித்து விளக்கமளிக்க ஜெயிலில் இருக்கும் சசிகலாவுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

ஆர்.கே.நகர் தேர்தலில் என்ன நடக்கின்றது, யார் யார் எப்படி பிரச்சாரம் செய்கின்றனர் என்பதே ஜெயிலில் இருக்கும் சசிகலாவுக்கு தெரியாத நிலையில் தற்போது தேர்தல் ஆணையத்திற்கு அவர் என்ன பதில் கூறப்போகிறார் என்பதே கேள்விக்குறியாக உள்ளது.

நாளை மறுநாள் அதாவது ஏப்ரல் 6ஆம் தேதி காலை 11 மணிக்குள் இதற்கான பதிலை சசிகலா அளிக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையம் கெடு விதித்துள்ளதால் சசிகலா டென்ஷனாக இருப்பதாக செய்திகள் வெளிவந்துள்ளது. ஏற்கனவே சசிகலாவை அதிமுகவினர் கிட்டத்தட்ட மறந்துபோய்விட்ட நிலையில் தேர்தல் ஆணையம் மட்டும் அவருக்கு தொடர்ந்து நோட்டீஸ் அனுப்பி கொண்டிருக்கின்றது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply