shadow

Ebola virus transmission electron micrograph image colorized Original image from CDCஉலக நாடுகளை தற்போது அச்சுறுத்திக்கொண்டிருப்பது எபோலா என்ற வைரஸ். இந்த வைரஸ் தற்போது அமெரிக்க மற்றும் ஐரோப்பிய நாடுகளில் மிக வேகமாக பரவி வருவதால் அந்த நாடுகளின் மக்கள் பெரும் பீதியடைந்துள்ளனர். இந்நிலையில் எபோலா வைரஸால் பாதிக்கப்பட்ட ஒருவர் இந்தியாவிற்கு வந்துள்ளதாக திடுக்கிடும் தகவல் ஒன்று வெளிவந்துள்ளது.

நைஜீரியாவில் இருந்து நேற்று டெல்லி வந்த ஒருவருக்கு எபோலா வைரஸ் தாக்கியிருக்கலாம் என்ற சந்தேகத்தை உலக சுகாதார அமைப்பு இந்திய அரசிடம் எச்சரிக்கை செய்ததால், உடனடியாக டெல்லி சுகாதாரத்துறையினர் அந்த நபரை கண்டுபிடித்து சோதனை செய்தனர். அவர்  தற்போது நலமுடன் இருப்பதாகவும் தனி வார்டில் வைக்கப்பட்டு அவரை மருத்துவர்கள் 24 மணி நேரமும் கண்காணித்து வருவதாகவும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் தெரிவித்துள்ளார்.

மேலும் கினியா என்ற நாட்டில் இருந்து சென்னைக்கு வந்த பார்த்திபன் என்பவர் எபோலா வைரசால் பாதிக்கப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் அவரை சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் மருத்துவ அதிகாரிகள் தீவிர சோதனை செய்தனர். ஆனால் அவருக்கு எவ்வித எபோலா வைரஸ் பாதிப்பும் இல்லை என தெரிய வந்துள்ளது. இவர் தேனி மாவட்டத்தை சேர்ந்தவர் என்று கூறப்படுகிறது.

Leave a Reply