shadow

12 நாட்கள் தொடர்ந்து வாழைப்பழம் மட்டுமே சாப்பிட்டால் என்ன ஆகும்?

bananaமுக்கனிகளில் ஒன்றான வாழைப்பழம் நார்சத்து, பொட்டாசியம் உள்ளிட்ட பல சத்துக்களை கொண்டது. ஆனால் அதனை மட்டுமே உண்டால் என்ன ஆகும்? அப்படி 12 நாட்கள் வெறும் வாழைப்பழம் மட்டுமே உண்டிருக்கிறார் ஒரு பெண்.

அரிசி, கோதுமை, சோளத்திற்க்கு அடுத்தபடியாக பலரால் உண்ணப்படும் உணவு வகையாக இது விளங்குகிறது. அதிக நுண்ணூட்டச் சத்துகள், குறைந்த விலை, இதையெல்லாம் தாண்டி, எளிதாக கிடைக்கும் உணவாக இது இருப்பதால், அன்றாட உணவில் இதைச் சேர்த்துக் கொள்வது நல்லது. மற்ற உணவுகளை விடுத்து, வெறும் வாழைப்பழத்தை மட்டுமே உண்டு வந்தால் உடல் எடை குறையும். ஆனால், அன்றாட உணவுடன் சேர்த்து, வாழைப்பழங்களை உண்டால் உடல் எடை அதிகரிக்கும்.

உடலை டீடாக்ஸ் செய்வதற்கும், உடல் எடையை இயற்கையாக குறைப்பதற்கும் யூலியா டர்பத் எனும் ஊட்டச்சத்து நிபுணர், 12 நாட்கள் வெறும் வாழைப்பழத்தையே உண்டு வந்துள்ளார்.

என்ன செய்தார்?

யூலா டர்பத்தும், அவரது பயிற்சியாளரும் இணைந்து “ஒரு கனி உணவு” முறையை முயன்றனர். இதன்படி, ஏதாவது ஒரு கனியை (இவர்கள் பயன்படுத்தியது வாழைப் பழம்) மட்டுமே ஒரு குறிப்பிட்ட நாட்களுக்கு உணவாக உட்கொண்டு இருக்க வேண்டும்.

பனானா டயட்!

எத்தனை வாழைப்பழங்கள் சாப்பிட வேண்டும் என்று தோன்றுகிறதோ அத்தனை பழங்களை சாப்பிடலாம், ஆனால் வேறெதுவும் சாப்பிடக் கூடாது. (வாழைக்கு பதிலாக வேறு பழத்தையும் சாப்பிடலாம்.) சிலர், நாள் முடிவில் உண்ணும் உணவில் ஏதேனும் கீரை வகைகளை சேர்த்துக் கொள்வதும் வாடிக்கை.

நன்றாக பழுத்த பழங்களை மட்டுமே உண்ண வேண்டும். எவ்வளவு உண்டால் போதும் என்று தோன்றுகிறதோ அவ்வளவு பழம் உண்ணலாம். குறைவாக உண்ண வேண்டிய அவசியமில்லை.

குறைந்தது 3 லிட்டர் வரை தண்ணீர் பருக வேண்டும்.

சாதாரண அளவு உடற்பயிற்சி செய்யலாம்.

இந்த சில நாட்களில் உடலில் ஆழமான டீடாக்ஸ் மற்றும் மறுசீரமைப்பு நடக்கும். எனவே தேவையான அளவு ஓய்வு அவசியம்.

இந்த நாட்களில் என்ன நடந்தது?

டீடாக்ஸ் நடப்பதற்கான ஒரு பெரிய அறிகுறி கூட இல்லாமல் இருந்தது. இந்த “பயணம்” முழுவதும் ஒரு நல்ல அனுபவமாக இருந்தது.

ஒரு தெளிவான சிந்தனை தெரிந்தது, வேலைகளை சுலபமாக மறுசீரமைக்க முடிந்தது.

உடல்நிலை சமச்சீராகவும் நேர்மறையாகவும் இருந்தது.

எனது தோல் இயற்கையாகவே பளபளப்பாகவும் மென்மையாகவும் மாறியது.

22 கிலோ மீட்டர்கள் ஓடிவிட்டு வந்த பிறகு, முன்பை விட குறைந்த நேரத்தில் சகஜ நிலைக்கு வர முடிந்தது, அதுவும் கால்களில் வழக்கமாக தெரியும் வலிகள் தெரியாமல். உடலின் வளைந்து கொடுக்கும் தன்மை உயர்ந்து இருந்தது.

வாழைக்கு உடல் எடையை குறைக்கும் ஆற்றல் உள்ளது. இதில் இருக்கும் கலோரிகள், நாம் உட்கொள்ளும் கார்போஹைட்ரேட்டுகளின் கலோரிகளுக்கு நிகரானது, ஆனால் இதில் நார்சத்து, தாதுக்கள், புரதம் என்று இருப்பதால் உடல் எடையை கூட்டாது. மேலும் பெக்டின் எனும் வேதிப் பொருள் இதில் அடங்கியிருப்பதால், வாழையை சாப்பிட்டு பல மணி நேரங்களுக்கு நமக்கு பசி வராமல் இருக்க முடியும்.

உடலில் சர்க்கரை அளவு ஏறாமலும் வாழைப்பழங்கள் பார்த்துக் கொள்ளும்.

Leave a Reply