shadow

earthquake
அமெரிக்காவில் உள்ள கலிபோர்னியா மாகாணத்தின் வடக்கு பகுதியில் நேற்று அதிகாலை மிகவும் சக்திவாய்ந்த பூகம்பம் ஏற்பட்டது. 6.0 ரிக்டர் அளவில் மிகவும் பயங்கர பூகம்பம் ஏற்பட்டதால் கலிபோர்னியாவின் கட்டிடங்கள் குலுங்கியதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்த நிலநடுக்கம் காரணமாக இதுவரை சுமார் 89 பேர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றன. கலிபோர்னியாவின் பல பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதால் அந்த மாகாணமே இருளில் மூழ்கியுள்ளது.

கலிபோர்னியாவில் உள்ள நாபா என்னும் இடத்தை மையமாக வைத்து ஏற்பட்டுள்ள இந்த பூகம்பம் மிகச்சரியாக அதிகாலை 3.30 மணிக்கு ஏற்பட்டது. கடந்த 1989ஆம் ஆண்டிற்கு பின்னர் அமெரிக்காவில் ஏற்பட்ட பயங்கரமான பூகம்பம் இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த பூகம்பம் காரணமாக பல இடங்களில் கேஸ் லைன் பைப்புகள் உடைபட்டு தீப்பற்றி எரிவதாகவும், அந்த தீயை அணைக்க தீயணைப்பு படையினர் கடுமையாக போராடி வருவதாகவும் கூறப்படுகிறது.

earthquake 1 earthquake 2 earthquake 3 earthquake 4 earthquake 5 earthquake 6 earthquake 7 earthquake 8 earthquake 9 earthquake 10 earthquake 11

Leave a Reply