சபரிமலையில் இ-உண்டியல். பக்தர்கள் காணிக்கை செலுத்த தேவஸ்தானம் வசதி.

Sabarimala-பாரத பிரதமரின் ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்ற அறிவிப்பால் பொதுமக்கள் அனைவரும் பணத்தட்டுப்பாடு காரணமாக திண்டாடி வருகின்றனர். கோவிலுக்கு செல்லும் பக்தர்கள் உண்டியலில் காணிக்கை கூட செலுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இந்த பிரச்சனைக்கு சபரிமலை ஐயப்ப சுவாமி கோவில் தேவஸ்தானம் தீர்வு கண்டுள்ளது. இதன்படி சபரிமலை கோவிலுக்கு வரும் பக்தர்கள் தங்கள் காணிக்கைகளை இ-உண்டியலில் செலுத்தலாம். அதாவது பக்தர்களின் கிரெடிட் அல்லது டெபிட் கார்டுகள் மூலம் காணிக்கை தொகைகளை செலுத்த ஸ்வைப் மிஷின் ஏற்பாடு செய்துள்ளது.

இந்த ஸ்வைப் மிஷின் மூலம் அனைத்து வங்கிகளின் டெபிட் மற்றும் கிரடிட் கார்டுகளை பயன்படுத்தி வ்வளவு பணத்தை வேண்டுமானாலும் கார்டுகள் வழியாக காணிக்கையாக செலுத்தலாம். ஆனால் லட்சக்கணக்கில், கோடிக்கணக்கில் காணிக்கை செலுத்தினால் வருமான வரித்துறை அதிகாரிகளின் ரெய்டு வரவும் வாய்ப்பு உள்ளது.

வரன் தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!
shadow

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *