திமுக கூட்டணியில் இருந்து காங்கிரஸ் விலகுமா? துரைமுருகன் பதில்

திமுக கூட்டணியில் இருந்து காங்கிரஸ் விலகுமா? என செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு திமுக கூட்டணியில் இருந்து காங்கிரஸ் விலகினால் எங்களுக்கு கவலை இல்லை என துரைமுருகன் பதிலளித்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது

காங்கிரஸ் மற்றும் திமுக கூட்டணி வரும் சட்டமன்றத் தேர்தல் வரை வலுவாக இருக்கும் என்று கூறப்பட்ட நிலையில் திடீரென உள்ளாட்சித் தேர்தலில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இந்த கூட்டணியில் பிளவு ஏற்பட்டது

இதனையடுத்து மீண்டும் இந்த கூட்டணியை இணைக்க காங்கிரஸ் தலைவர்கள் முயற்சித்து வந்த நிலையில் திமுக தரப்பில் இருந்து பச்சைக்கொடி காட்டவில்லை என்றே தெரிகிறது

ஏற்கனவே திமுக-காங்கிரஸ் கூட்டணி நீடிக்குமா என்பதை காலம்தான் பதில் சொல்ல வேண்டும் என டிஆர் பாலு கூறிய நிலையில் தற்போது ’திமுக கூட்டணியில் இருந்து காங்கிரஸ் விலகினாலும் கவலை இல்லை’ என துரைமுருகன் கூறி இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

Leave a Reply