திமுக பொதுச்செயலாளர் ஆகிறார் துரைமுருகன்: பரபரப்பு தகவல்

திமுக பொருளாளராக இருந்து வரும் துரைமுருகன் அவர்கள் திமுகவின் அடுத்த பொதுச் செயலாளராக நியமனம் செய்ய இருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளது

திமுக தலைவர் முக ஸ்டாலின் அவர்கள் என்று பேட்டி அளித்த போது திமுக பொருளாளராக இருந்து வரும் துரைமுருகன் திமுக பொதுச்செயலாளராக ஆசைப்படுவதாகவும் இதனை அடுத்து வரும் 29ஆம் தேதி நடைபெறும் பொதுக்குழுகூட்டத்தில் அவர் பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட இருப்பதாகவும் தெரிவித்தார்

இதனை அடுத்து திமுக பொருளாளர் பதவியை விரைவில் துரைமுருகன் ராஜினாமா செய்வார் என்று கூறப்படுகிறது கடந்த 42 ஆண்டுகளாக திமுக பொதுச்செயலாளராக இருந்த அன்பழகன் அவர்கள் சமீபத்தில் காலமானார் என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply