shadow

16

உலக அளவில் போலி ஏ.டி.எம் கார்டுகள் தயாரித்து மோசடியில் ஈடுபட்டுவந்த மிகப்பெரிய கும்பல் ஒன்றை சென்னை போலீசார் கைது செய்து தீவிர விசாரணை செய்து வருகின்றனர்.

போலி கிரிடிட் கார்டுகள் மற்றும் ஏடிஎம் கார்டுகள் தயாரித்து மோசடியில் ஈடுபட்ட 5 பேரை சென்ற வாரம் சின்னமலை பகுதியில் போலீசார் அதிரடியாக கைது செய்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையின் அடிப்படையில், சென்னை ராமாவரம் பகுதியில் தலைமறைவாக இருந்த, சர்வதேச அமைப்பான இண்டர்போல் என்ற அமைப்பால் தேடப்படும் இலங்கையைச் சேர்ந்த ஜெயதரன் உள்ளிட்ட 3 பேரை போலீசார் இன்று அதிரடியாக கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட, ஜெயதரன் மீது இலங்கையில் கிரெடிட் கார்டு மோசடி வழக்கு பதிவுச் செய்யப்பட்டுள்ளது என்பது தெரிய வந்துள்ளது. இலங்கை நீதிமன்றத்தில் ஜாமீன் பெற்று  வெளிவந்த ஜெயதரன், டூப்ளிகேட் பாஸ்போர்ட் மூலம்  சென்னை வந்ததாகவும், பிறகு சர்வதேச கும்பல் உதவியுடன் போலி கிரெடிட் கார்டுகள்  தயாரித்து மோசடியில் ஈடுபட்டு வந்ததாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

எனவே ஏ.டி.எம் கார்டுகள் மற்றும் கிரெடிட் கார்டுகள் பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள் அடிக்கடி தங்கள் பின் நம்பரை மாற்றிக்கொள்ள வேண்டும் என்று போலீஸார் அறிவுரை கூறியுள்ளனர்

Leave a Reply