shadow

தமிழில் ரீமேக் ஆகிறது சார்லி.

charlieமலையாளத்தில் சூப்பர் ஹிட் ஆன சந்திரமுகி, த்ரிஷ்யம், பெங்களூர் டேய்ஸ், உள்பட பல படங்கள் தமிழில் ரீமேக் செய்யப்பட்டு மாபெரும் வெற்றி பெற்றுள்ள நிலையில் மேலும் ஒரு மலையாள திரைப்படம் ரீமேக் ஆகவுள்ளது. மணிரத்னம் இயக்கிய ‘ஓகே கண்மணி’ நாயகன் துல்கார் சல்மான் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த மலையாள திரைப்படம் ‘சார்லி’. இந்த திரைப்படத்தின் தமிழ் ரீமேக் உரிமையை பிரமோத் பிலிம்ஸ் நிறுவனம் பெற்றுள்ளது.

சார்லி படத்தின் தமிழ் ரீமேக் படப்பிடிப்பு அடுத்த மாதம் தொடங்கவுள்ளதாகவும், துல்கார் சல்மான் வேடத்தில் நடிக்க முன்னணி நடிகர்கள் இருவரிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாகவும், விரைவில் இதுகுறித்த அறிவிப்பு வெளிவரும் என்றும் கூறப்படுகிறது. ‘சார்லி’ படத்தில் நாயகியாக நடித்த பார்வதி தமிழிலும் அதே வேடத்தில் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த படத்தின் ஆரம்பகட்ட பணிகள் தொடங்கப்பட்டுவிட்டதாகவும், இந்த படத்தில் பணிபுரியும் தொழில்நுட்ப கலைஞர்களின் தேர்வு விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.

Leave a Reply