shadow

ஜிஎஸ்டி பட்டப்படிப்பு: விரைவில் டெல்லி பல்கலையில் அறிமுகம்

நாடு முழுவதும் கடந்த 1ஆம் தேதி முதல் ஜிஎஸ்டி வரிவிதிப்பு நடைமுறைக்கு வந்துள்ளது. இதனால் நாடு முழுவதும் ஒரே வரி என்று கூறப்பட்டாலும் இதில் பல்வேறு குழப்பங்கள் இருப்பதாகவும், இந்த குழப்பங்கள் இன்னும் ஓரிரு மாதங்களில் தீரும் என்றும் கூறப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் ஜிஎஸ்டி குறித்த பட்டப்படிப்பை விரைவில் அறிமுகம் செய்ய உள்ளதாக டெல்லி பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

அதனுடன் சைபர் சட்டப் பாடப்படிப்பையும் கொண்டு வரவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இதுகுறித்து ஆலோசனை நடத்திய பல்கலைக்கழக துணைவேந்தர் யோகேஷ் தியாகி தலைமையிலான குழுவினர், ஜி.எஸ்.டி குறித்து தெரிந்து கொள்ள மாணவர்கள் ஆர்வமாக உள்ளதாக குறிப்பிட்டுள்ளனர். அதனால் வர்த்தக பிரிவில் ஜி.எஸ்.டியையும், முதுகலை டிப்ளமோ பிரிவில் சைபர் சட்டத்தையும் அறிமுகம் செய்யவுள்ளதாக கூறியுள்ளனர்.

Leave a Reply