shadow

டி.எஸ்.பி விஷ்ணுப்ரியாவுடன் நெருக்கமாக இருந்த வழக்கறிஞர் தற்கொலை முயற்சி.

vishnupriyaநாமக்கல் மாவட்ட டி.எஸ்.பி. விஷ்ணுப்ரியாவின் தற்கொலை வழக்கு தற்போது விசாரணை செய்யப்பட்டு வரும் நிலையில் விஷ்ணுப்ரியாவுடன் நட்பாக இருந்த வழக்கறிஞர் ஒருவரும் நேற்று தற்கொலைக்கு முயன்றுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த என்ஜீனியரிங் கல்லூரி மாணவர் கோகுல்ரால் கொலை வழக்கை விசாரணை செய்து வந்த டி.எஸ்.பி விஷ்ணுபிரியா திடீரென மர்மமான முறையில் தற்கொலை செய்து கொண்ட நிலையில், இந்த வழக்கு தமிழக சிபிசிஐடி போலீசாரால் விசாரணை செய்யப்பட்டு வருகிறது.  விஷ்ணுப்ரியாவின் செல்போனை ஆய்வு செய்ததில், மதுரையை சேர்ந்த வழக்கறிஞர் மாளவியா என்பவர் விஷ்ணுபிரியா அடிக்கடி பேசியிருப்பது தெரிய வந்தது.

எனவே வழக்கறிஞர் மாளவியாவிடம் சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தினர். இந்த விசாரணையில் விஷ்ணுபிரியாவுடன் காதலில் இருந்ததாக கூறும்படி போலீசார்  தனக்கு நெருக்கடி அளித்து வருவதாக வழக்கறிஞர் மாளவிகா திடுக்கிடும் குற்றச்சாட்டு ஒன்றை தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் வழக்கறிஞர் மாளவியா நேற்று மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையம் அருகே விஷமருந்திய நிலையில் மயங்கி கிடப்பது தெரிய வந்தது. இதனை பார்த்த அங்கிருந்தவர்கள் 108 ஆம்புலன்சுக்கு தகவல் அளித்தனர். மதுரை ராஜாஜி பொது மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்ட அவரது உடல் நிலை முன்னேற்றம் அடைந்துள்ளது. அவரது உயிருக்கு ஆபத்தில்லை என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

தற்போது 31 வயது நிரம்பிய மாளவியாவிடம், விஷமருந்தியதற்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணைக்கு அவர்  ஒத்துழைப்பு அளிக்க மறுப்பதாக போலீஸ் தரப்பில் சொல்லப்படுகிறது.

English Summary: Advocate linked to DSP Vishnupriya‘s death attempts suicide, doesn’t say why

Leave a Reply